Entertainment
ராமேஸ்வரம் கோவிலில் இன்று முதல் ஸ்படிக லிங்க பூஜை தொடங்கியது
இந்தியாவின் தேசிய புண்ணியஸ்தலமாக ராமேஸ்வரம் விளங்குகிறது. காசிக்கு அடுத்து ராமேஸ்வரம் என்று பேச்சு வழக்கிலேயே வந்து விடுவதால் முன்னோர்கள், திதி, தர்ப்பணம் சிரார்ந்தம் கொடுப்பவர்கள் ராமேஸ்வரம் வந்து கொடுக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு அனுதினமும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வட நாட்டில் இருந்தும் அதிக பக்தர்கள் வந்து செல்லுகின்றனர்.
இந்த ராமேஸ்வரம் கோவிலில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் அதிகாலையில் ஸ்படிக லிங்க பூஜை செய்வது இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு அதிகாலையில் பூஜை நடக்கும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் நமக்கு கிடைத்தற்கரிய பல நற்பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோவிலில் கொரோனா காரணமாக பல மாதங்களாக இந்த ஸ்படிக லிங்க பூஜை நடைபெறவில்லை. தற்போது அரசு அனுமதியால் இன்றில் இருந்து மீண்டும் ஸ்படிக லிங்க பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.