Published
10 months agoon
இராமேஸ்வரம் வடகாடு பகுதியை சேர்ந்த மீனவ பெண் ஒருவர் தனது குடும்ப வருமானத்திற்காக தினசரி பாசி எடுக்கும் வேலையை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 24ம் தேதியன்று பாசி எடுக்க சென்ற இவரை காணாத நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனால் கொதித்தெழுந்த இப்பகுதி மக்கள், இந்த பகுதியில் இறால் பண்ணையில் தங்கி இருந்த ஒடிசா மாநில நபர்கள் மீது கொண்ட சந்தேகத்தால் அவர்கள் மீது தாக்குதல் செய்தனர்.
மக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்திய போலீஸ் அவர்களை விசாரித்தது. அதில் 6 பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் என தெரியவந்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள்தான் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்
வேலூர் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல்- கைதானவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ராமேஸ்வரம் கோவிலில் இன்று முதல் ஸ்படிக லிங்க பூஜை தொடங்கியது
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்
அருண் விஜயுடன் நடிக்கும் கேஜிஎஃப் நடிகர்
காரைக்குடி சென்டிமெண்டை விடாத ஹரி