ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த விக்ரம் பட குழு

ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த விக்ரம் பட குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், பகத் பாஸில், விஜய் சேதுபதி,  சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை ஜூன் 3 அன்று ரிலீஸாகிறது. இப்படத்துக்காக கமல் ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தங்கள் தலைவரின் படம் 3 வருடங்களுக்கு பிறகு வருகிறது என்பதே இவ்வளவு ஆர்வத்திற்க்கும் காரணம். இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு எல்லோரையும் எகிற வைத்துள்ளது.

குறிப்பாக அதிக அளவு ரசிகர் பட்டாளம் உள்ள விஜய் ரசிகர்களும் இப்படத்தை பார்ப்பார்கள். காரணம் இதற்கு முன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியதாலும், இனி வரப்போகும் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாலும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு எகிறவைத்துள்ளது

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் உட்பட படக்குழுவினர் சிலர் ராமேஸ்வரத்தில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.