இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து நிறைய பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்தார். சில காலம் தடைபட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் நடந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலியானார்.
இதனால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படாமலே ஒத்திவைக்கப்பட்டது. இந்த படம் இயக்கப்படுமா இயக்கப்படாதா என்ற நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை ராம்சரணின் அப்பாவான தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி க்ளாப் அடித்து துவங்கி வைத்தார்.
கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க தில் ராஜூ தயாரிக்கிறார்.
Some Projects are Special from Word Go!This is one such. It’s been a dream to work with @shankarshanmugh Thru @AlwaysRamCharan that dream is set to become a reality.Their film launched today.Wishing them,@advani_kiara #DilRaju @SVC_Official & entire team Very Best! #RC15 #SVC50 pic.twitter.com/BYVGzFuYDz
— Chiranjeevi Konidela (@KChiruTweets) September 8, 2021