ராமாயணம் குறித்து எம்.ஆர் ராதா சொன்னது- ராதிகா வெளியிட்ட புதிய தகவல்

68

நடிகர் எம்.ஆர் ராதா கடவுள் நம்பிக்கையற்றவர். இவர் திருவாரூர் தங்கராசு நடிப்பில் நடித்த நாடகமான ரத்தக்கண்ணீரில் நாத்திக கொள்கைகளை அள்ளி வீசி இருப்பார். அது படமாகவும் பின்பு வந்தபோது அதிலும் செம நக்கலாக ஆத்திகத்தையும் கடவுள் நம்பிக்கையையும் கிண்டல் செய்திருந்தார். ரத்தக்கண்ணீர் திரைப்படம் பெரிய வெற்றி அடைந்து எம்.ஆர் ராதாவின் நக்கலான டயலாக்குகள் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானது.

இன்று ராதிகா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் எம்.ஆர் ராதா ராமாயணம் பற்றி திருச்சியில் நாடகம் நடத்துவது பற்றி ஒரு போஸ்டர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ராமாயணம் நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்பவர்கள் என் நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் . அவர்கள் காசும் எனக்கு வேண்டாம் மீறி வந்து பார்த்து அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என எம்.ஆர் ராதா வெளியிட்ட ஒரு பழமையான அறிவிப்பை  ராதிகா வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  25 வருட சினிமா வாழ்வில் சுதீப்
Previous articleஸ்டாலின் தான் வராறு விளம்பர பலகை வைக்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
Next articleதேமுதிக தலை குனியாது- விஜயபிரபாகரன்