அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பு பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்து கோர்ட் உத்தரவுப்படி அனைத்தும் சமரசமாகி விட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜைகள் போடப்பட்டு அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்கோவில் பணிகள் குறித்து அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள மஹந்த் கமல் நாயஸ் தாஸ் கூறுகையில், அக்டோபர் 17ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன.
இந்த விசேஷ தினத்தன்று தூண்களை பதிக்கும் பணி இக்கோவில் பணிகளின் முதல் பணியாக தொடங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு அடித்தளமாக 1200 தூண்கள் பூமியில் பதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.