விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. கடந்த 1995, 96களில் இவர் மூலிகை மூலம் பெட்ரோல் எடுக்கிறேன் என சவால் விடுத்தார். அந்த நேரத்தில் மீடியாக்களால் இவர் உச்சபட்ச பாப்புலரானார்.
இருப்பினும் இவர் பெட்ரோல் எடுக்கும் முறையை சரியாக நிரூபிக்கவில்லை என மத்திய அரசு இவரது பெட்ரோல் எடுக்கும் முறைக்கு அனுமதி மறுத்தது.
இவர் சில நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார். இன்று வரை மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கலாம் என தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார் இவர். இருப்பினும் என்ன காரணமோ இவர் பெட்ரோல் எடுக்கிறேன் என சொல்லும் அந்த அந்த ஆய்வு நடக்கவே இல்லை அதற்கான சூழ்நிலையும் வரவில்லை.
ராமர் பிள்ளை தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு மோசடி கும்பலை பெங்களுர் போலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அரசு வேலை, எம்.பி, எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் ராமர் பிள்ளையிடமும் மூலிகை பெட்ரோலுக்கு அனுமதி வாங்கி கொடுப்பதாக மகாதேவய்யா கும்பல் ராமர் பிள்ளையை தொடர்புகொண்டு பேசியுள்ளனர். மேலும், இதற்காக பல லட்சம் ரூபாயையும் ராமர்பிள்ளையிடம் இருந்து வாங்கிஉள்ளனர். இதுகுறித்து ராமர் பிள்ளையிடம் தனியாக புகார் வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.