பவன் கல்யாண் கட்சியில் இணைந்த ராமமோகன் ராவ்…

275

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் நடிகர் பவன் கல்யாண் கட்சியில் இணைந்துவிட்டார்.

ஜெ.வின் மறைவிற்கு பின் சிபிஐ சோதனையில் சிக்கி சின்னா பின்னமானவர் ராம மோகன்ராவ். அதுவும், தலைமை செயலகத்திலேயே நடந்த சோதனை தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ கூறியது. எனவே, அவரின் பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும், அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வு பெற்றார். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி பரபரப்பான தகவல்களை கூறி அதிர வைத்தார்.

இந்நிலையில், தற்போது ஆந்திர அரசியல் பக்கம் அவர் சென்றுள்ளார். நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  ஃபாஸ்ட் டேக் என்றால் என்ன? FasTag என்றால் என்ன?