பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்…

184
ram jethmalani

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் ஒருவர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா – பாக் பிரிவினையின் போது இந்தியாவில் குடியேறினார். மும்பையில் பட்டம் படித்த இவர் வழக்கறிஞராக திறம்பட செயலாற்றி வந்தார்.

1996 – 2000 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின் போது அவர் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 தமிழகர்களுகு ஆதரவாக இவர் வாதாடியுள்ளார். மேலும், ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கும், திமுகவின் 2ஜி வழக்கு, எடியூரப்பா பண மோசாடி, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு என இந்தியாவின் முக்கிய வழக்குகளில் இவர் வாதாடியுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு தேசிய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  பேனர்களை வைக்கக் கூடாது - ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு