Entertainment
மனைவி குறித்த ராஜ்கிரணின் அன்பான பதிவு
நடிகரும் இயக்குனருமான ராஜ்கிரணின் மனைவியின் பிறந்த நாள் இன்று அதையொட்டி ராஜ்கிரண் இட்டுள்ள பதிவு.
எவ்வித நிபந்தனைகளும்
இல்லாமல்,
ஆத்மார்த்தமாக
அன்பைப்பொழிவதே
காதல்…
இறை அருளால்,
என் காதல் மனைவிக்கு
பிறந்த நாளான இன்று,
இறைவனிடம், இரு கரங்கள் ஏந்தி,
அழுது மன்றாடியவனாய்,
என் மனைவி எல்லா மேன்மைகளையும்
பெற்று, வாழ்வாங்கு வாழ பிரார்த்தித்து,
என்னில் பாதியாகி,
என்னுள்ளே தானுமாகிய
என்னவளை வாழ்த்துகிறேன்…
வாழ்க வாழ்க.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும்
வேண்டி, ஈருடல் ஓருயிராகிய நாங்கள்… என்று ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.
