கடந்த 1985ம் ஆண்டு வந்த திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ராஜசேகர் இயக்கி இருந்தார் ஓரளவு கமலுக்கு பெயரை பெற்றுக்கொடுத்த படம் காலம் கடந்தும் கமல் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருக்கிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளான இன்று கமல் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பதாக சொல்லப்பட்டது அதன் படி படத்தின் பெயர் விக்ரம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன் வந்த படத்தின் பெயர்கள் திரும்ப படத்திற்கு டைட்டிலாக வைக்கப்பட்டால் இதுவரை வேறு கதாநாயகர்கள்தான் அதில் நடித்திருப்பார்கள் படத்தின் பெயர் {உதாரணம்: சாமி, சாமி 2 } இது போல வைக்கப்பட்டிருக்கும் ஏற்கனவே வைக்கப்பட்ட அதே பெயரில் அதே ஹீரோவே நடிப்பது ஆச்சரியமாக உள்ளது.
கமலஹாசன் நடிக்கும் 232வது படம் இது.