Corona (Covid-19)
சென்னை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று! அதிர்ச்சியளிக்கும் தகவல்!
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்த இதயவியல் துறை மருத்துவருக்கும் செவிலியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டமாக இருப்பது தலைநகர் சென்னைதான். அங்கு 217 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.