உச்சம் தொட்டுவிட்டார் பார்த்திபன் – ஒத்த செருப்பை பாராட்டிய ரஜினி

339

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தை நடிகர் ரஜினி மிகவும் பாராட்டியுள்ளார்.

எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் சில சமயம் பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்வார். அப்படி பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பது போல் திரைக்கதையை பார்த்திபன் அமைத்துள்ளார். இப்படம் சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த பல திரைத்துறை பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பாராட்டியுள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படம் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னனி இசை, பின்னணியில் ஒலிக்கும் குரல்கல் என அனைத்தும் அற்புதம், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என இப்படத்தை ரஜினி வாழ்த்தியுள்ளார்.

Notice

பாருங்க:  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பழைய சீரியல்கள் – ஏன் தெரியுமா?