ரஜினி என்னிடம் படம் செய்ய சொன்னார்- வி சேகர்

28

ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் அவலங்களை அழகிய முறையில்  எடுத்து சினிமாவில் காண்பித்தவர் இயக்குனர் வி.சேகர். இவர் நடுத்தர வர்க்கம் மற்றும் சமூக பிரச்சினைகளை காமெடி கலந்து சொல்லி இருப்பார். வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிபோச்சு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட படங்கள் இவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

இவர் கவுண்டமணி செந்தில் போன்றவர்களை ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி விட்டு பின்பு விவேக் வடிவேலுவை தனது படங்களில் நடிக்க வைத்து படங்களை வெற்றி பெற செய்தார்.

ஒரு கட்டத்தில்  விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட படத்தை எல்லாம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கூட இது போல ஒரு படத்தில் நானும் நடிக்க வேண்டும் என விரும்பினாராம். ஆனால் வி சேகரோ நான் இயல்பான படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறேன் சார் , உங்களை வைத்து படம் இயக்கினால் பெரிய லெவலில் இயக்க வேண்டும் அப்புறம் உங்கள் படம் முடிந்த பிறகு பெரிய நடிகர்களை தேட வேண்டும் உங்களுக்கு இயக்கியது போல் மாஸ் ஆன கதையை தேட வேண்டும் அதனால் வேண்டாம் சார் நான் இருக்கும் சின்ன சின்ன நட்சத்திரங்களை வைத்து இயக்கி இப்படியே இருக்கிறேன் என கூறிவிட்டாராம். இதை சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறாராம்.

பாருங்க:  ரஜினிகாந்துக்கு வெறும் ரத்த அழுத்தம்தான்
Previous articleதியேட்டர்ல வெளியாகி இருந்தா- தனுஷின் டுவிட்
Next article2 டிஜி கொரோனா மருந்து எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்