ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்

12

ரஜினிகாந்த் தற்போது புதிய திரைப்படமான சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா பிரச்சினைகளால் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து தடைபட்டுகொண்டே வருகிறது.

எதிர்பார்த்தபடி இப்படம் வரும் தீபாவளிக்கு வருமா என தெரியவில்லை. இந்நிலையில்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் அல்லது தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இது குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி வெளியிட்ட பதிவில், “எனது அடுத்த திரைப்படம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல, இது குறித்து விரைவில் அறிவிக்கிறேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் தலைவர் 169 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது, இதையடுத்தி உறுதியான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாருங்க:  கர்ணன் இரண்டாவது பாடல் தேதி அறிவிப்பு
Previous articleஸ்டாலின் வெற்றிக்காக நாக்கை அறுத்தபெண்- கண்டித்த ஸ்டாலின்
Next articleநடிகர் சந்தீப் கிஷனின் மிகப்பெரும் உதவி