ஆதரவு ரஜினிக்கே -இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஆதரவு ரஜினிக்கே -இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

தமிழில் பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக அறிமுகமெடுத்த இவருக்கு உடனடியாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பேட்ட என்ற படத்தை ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், பல வருடங்கள் முன் பார்த்த ரஜினியை இயல்பாக அழகாக காண்பித்து இருந்தார். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் , ரஜினி கட்சி தொடங்கினால் என் ஆதரவு அவருக்கே என கூறியுள்ளார்.

தலைவர் வந்து பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மீண்டும் அவரோடு படம் பண்ணுவேனா என்று தெரியாது. கண்டிப்பாக அவருக்கு ஓட்டுப் போடுவேன். அதற்குத் தயாராக இருக்கிறோம். தலைவர் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என அறிவித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.