தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் இன்று காலை சந்தித்து பேசினார்.
ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் 2 வது திருமணம் நாளை போயஸ்கார்டன் இல்லத்தில் எளிமையாக நடக்கவுள்ளது. அதன்பின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கவுள்ளது.
இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் அரசியல் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து மகளின் திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகிறார். திருநாவுக்கரசு, திருமாவளவன், ஸ்டாலின் ஆகியோரை அவர் சந்தித்து பத்திரிக்கை கொடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிச்சாமியில் இல்லத்திற்கு ரஜினி வந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த ரஜினி, மகளின் திருமண பத்திரிக்கையை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “திருமணத்திற்கு வருவதாக முதல்வர் என்னிடம் கூறினார்” என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.