வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது – ரஜினி பேட்டி

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது – ரஜினி பேட்டி

வட மாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது என ரஜினி பேட்டியளித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரு பொது மொழி தேவை. இந்தியாவை இந்தியால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும். எனவே, அனைவரும் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர ரஜினி ‘எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால்தான் அந்த நாட்டின் முன்னேற்றம் , ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லதாக இருக்கும். ஆனால், நமது நாட்டில் பொதுமொழியை கொண்டு வரமுடியாது. இந்தியாவில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. முக்கியமாக, இந்தியை திணித்தால் தமிழகத்தில் தென்னிந்தியாவில் மட்டுமல்ல. வடமாநிலங்களில் கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என அவர் தெரிவித்தார்.