விஜயகாந்தை சந்தித்த ரஜினிகாந்த் – காரணம் என்ன?

290

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், சுமூக உறவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு வந்தார். அவரை பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் விஜயகாந்திடம் அவரின் உடல் நிலை குறித்து ரஜினி விசாரித்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்ட அங்கிருந்து கிளம்பி சென்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “விஜயகாந்தை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றேன்” என பதிலளித்தார்.

சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில்தான் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை!