மதுரையில் மாநாடு.. கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி.. பணிகள் தீவிரம்..

மதுரையில் மாநாடு.. கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி.. பணிகள் தீவிரம்..

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப் போவதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார் ரஜினி. ஆனால், ஒன்றை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் இன்னும் தனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், அவ்வப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து அரசியல் தொடர்பான பணிகளை அவர் முடுக்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தது.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் அவர் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வருகிற பொங்கல் பண்டிகையின் போது மதுரையில் மாநாட்டை நடத்தி ரஜினி தனது கட்சி பெயரை அறிவிக்கவுள்ளார் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதில் தனது கட்சி போட்டியிடும் என அவர் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.