கொரோனாவில் இருந்து பலரை சித்த வைத்தியத்தின் மூலம் காப்பாற்றியவர் சித்த மருத்துவர் டாக்டர் வீரபாபு. இவரை அறியாதோர் இருக்க முடியாது. கடுமையான கொரோனா தொற்றுக்காலத்தில் எளிய மருந்துகள் உடற்பயிற்சிகள் மூலம் இவர் குணமாக்கியதால் இவர் பிரபலமானவாராகி விட்டார்.
இவர் தற்போது உழைப்பாளி மருத்துவமனை என்ற மருத்துவமனையை தொடங்கி வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பே 10 ரூபாய்க்கு சாப்பாடும் கொடுத்திருக்கிறார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராம். அவர் பொதுச்சேவை செய்ய அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்ன உடனே இவரும் பொதுச்சேவையில் களமிறங்கி விட்டாராம்.

