மீண்டும் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன்

மீண்டும் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக தனக்கு கட்சியும் வேணாம் கொடியும் வேணாம், கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று பாடல்கள் வைத்து கட்சிக்கே வரமாட்டேன் என சொல்லி இருந்தார்.

பின்பு அவரது ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பின்பு கட்சிக்கு வருவேன் என வாக்கு கொடுத்தார். பின்பு கட்சி அமைக்கும் நாளையும் மாற்றி மாற்றி வைத்தார்.

பின்னாட்களில் ரஜினி கட்சிக்கு வர அதிகம் பாடுபட்டவர் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் தான். இவர்தான் ரஜினியை கட்சிக்கு அழைத்து வந்து விட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டார்.

இருப்பினும் ரஜினி அரசியல் எனக்கு சரிவராது என்ற வகையில் விலகிவிட்டார்

இந்த நிலையில் ரஜினியை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழருவி மணியன் சந்தித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.