அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரா

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறாரா

கடந்த 1996 தேர்தலில் ரஜினிகாந்த் முதன் முதலில் திமுக- தமாக கூட்டணிக்கு குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை திமுக பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அந்த கால ராஜாதி ராஜா பாடலில் எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம் என பாடினார் ரஜினி. கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என முத்து படத்தில் பாடினார். இவர் ஆரம்பிப்பாரா மாட்டாரா என குழப்பங்கள் தொடர்ந்த நிலையில் இரண்டு வருடம் முன்பு தனது ரசிகர்களை தனது ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார். அதில் தான் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும் கட்சி தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் கொரோனா பாதிப்புகளால் வேறு உலகம் முழுவதும் முடங்கி விட்டது. இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில் ரஜினி தன் கட்சியை பிப்ரவரியில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தலுக்கு 3 மாதங்கள் முன் ரஜினி  கட்சி தொடங்கி வேட்பாளர்களை அறிவித்து பணிகளை முடுக்கி விட இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது.