Entertainment
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார்.
இன்னும் சில தினங்களில் ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்க உள்ளார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகரும், இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயனும் ரஜினியுடன் நடிக்க இருக்கிறார் அதுவும் ரஜினிக்கு மகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.
