ரஜினி படம் இப்போ ஷூட் இல்லை- மாற்று முடிவு எடுத்த சிறுத்தை சிவா

24

சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், என பல்வேறு படங்களை இயக்கி அதை சூப்பர் ஹிட் ஆக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவருக்கு சமீப நாட்களாக பல சோதனைகள்தான்.

சில நாட்களுக்கு முன் இவரது தந்தை மறைந்தார். ரஜினியின் அண்ணாத்தே படத்தை ஆரம்பித்தார் அது ஆரம்பித்த சில நாட்களிலேயே கோவிட் 19 பாதிப்பு வந்து ஷூட்டிங்கே நின்றது.

இந்நிலையில் 8 மாத கொரோனா தளர்வுகளுக்கு பின் கடந்த மாதம் தான் அண்ணாத்தே ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நான்கு பேருக்கு கொரோனா. ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது உள்ளிட்ட காரணங்களை வைத்து வரும் ஏப்ரலில் தான்  ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் சிவா.ரஜினியை வைத்து பெரிய ப்ராஜக்டை இருந்ததால் அந்த படம் தள்ளி போனது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் இடைவெளியில் ஏப்ரல் வரை சும்மா இருக்க வேண்டாம் என்று இயக்குனர் சிவா முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது அடுத்து இயக்கவுள்ள சூர்யா படத்தின் முதற்கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘அண்ணாத்த’ படத்தை முடித்த கையோடு உடனடியாக சூர்யா படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட சிவா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாருங்க:  ஷெரின் எழுதிய காதல் கடிதம்...என்ன எழுதினார்?.. யாருக்கு தெரியுமா? (வீடியோ)