நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணியளவில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். மேலும், அவருடன் அமைச்சரவையில் பங்கேற்கும் பல்வேறு எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே அவருடன் பாஜக மூத்த தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ரஜினி அங்கு வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து நின்று ரஜினிக்கு வணக்கம் கூறி வரவேற்றனர். அவர்களிடம் நலம் விசாரித்த ரஜினி தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். இந்த விழாவில் பங்கு கொள்வதற்காக சென்ற ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு 10வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது