ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல எப்படி அனுமதி கிடைத்தது- கஸ்தூரி

49

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கஸ்தூரி. இவர் சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் தினமும் பத்திரிக்கை செய்திகளில் இடம் பிடித்து விடுவார். காரணம் என்னவென்றால் இவர் டுவிட்டரில் கேட்கும் கேள்விகள்தான்.

சமூக ரீதியான விஷயங்களில் தன்னை உட்படுத்திக்கொண்ட கஸ்தூரி சமுதாயம் சார்ந்த கேள்விகளையும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கேட்க தவறியதில்லை.

தற்போது ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார் அங்கு உடல் நலம் சம்பந்தமான சிகிச்சைக்கு சென்றுவிட்டு அங்கு ஓய்வெடுத்துவிட்டு வருவதற்காக ரஜினி சென்றுள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய கொரோனா பெருந்தொற்று நேரத்தில் யாரும் வர அமெரிக்கா அனுமதிக்காதபோது ரஜினி மட்டும் செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாருங்க:  சசிக்குமார் நடிக்கும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி
Previous articleமுத்தரசனை நலம் விசாரித்த உதய்
Next articleமகளுடன் வித்தியாச கெட் அப்பில் நகுல்