Entertainment
வாவ் ரஜினியின் தீவிர ரசிகர் மறைந்த முத்துமணி பற்றி தெரியாத ஆச்சரிய தகவல்கள்
ரஜினியின் தீவிர ரசிகரான முத்துமணி என்பவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். ரஜினிக்கு முதன் முதலில் மன்றம் ஆரம்பித்தது இவர்தான்.
ரஜினிதான் இவரது திருமணத்தை நடத்தி வைத்தார். இவரை பற்றிய பழைய நினைவுகளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் எடுத்து உறைக்கிறார்கள்.
நல்ல மனிதன். அவரின் தந்தை (பிச்சை) பில்டிங் contractor. அன்றைய நாட்களில் மதுரையில் ரசிகர் மன்றங்கள் தங்கள் அபிமான நடிகரின் போட்டோவை பிரேம் செய்து மன்றம் பெயர் எழுதி மாட்டுவார்கள். ரஜினியின் 4வது படம் கவிக்குயில்(1977 ஜீலை 29) மதுரை ஶ்ரீதேவியில் வெளியான போது ஒரு photo பார்க்கிறேன்
Super Star of the era Rajinikanth Fans Association என்று ஆங்கிலத்தில் (ஆச்சரியம்) எழுதியிருக்க மன்றம் துவக்கப்பட்ட நாள் பார்த்தால் 10.02.1976, அதாவது மூன்று முடிச்சு கூட வெளியாகாத நேரம். தாணு போன்றவர்கள் நான்தான் முதலில் பட்டம் கொடுத்தேன் என்று சொல்லும்போதும்கூட அதற்கும் முன்பாக
பட்டம் வழங்கியவர். நான் கல்லூரி படிக்கும் காலம். ஆகவே சிவாஜி படங்கள் தவிர அனைத்து படங்களையுமே opening ஷோ பார்ப்பது வழக்கம். ரகுபதி ராகவன் ராஜாராம், பு.ஒரு கே.குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி என தொடர்ந்து முத்துமணியை பார்த்தாலும் சங்கர் சலீம் சைமன் opening ஷோவில்
பேசினோம். பிறகு தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள், சகோதர சவால், மாங்குடி மைனர், பைரவி, இ.ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வ.காதலியே, முள்ளும் மலரும், தப்புத்தாளங்கள் வரை முதல் நாள் தியேட்டர் சந்திப்பு தொடர்ந்தது. அடுத்து ஜஸ்டிஸ் கோபிநாத் opening ஷோவில்தான் நான் தீவிர நடிகர் திலகம் ரசிகன்
என்பது அவருக்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த பழகும் தன்மையில் எந்த மாற்றமுமில்லை. அவரே நடிகர் திலகம் ரசிகர் என்பதை பிறகு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு முதல் நாள் நான் போவது குறைய தியேட்டர் சந்திப்பு இல்லாமல் போனது(தர்ம யுத்தம் தவிர).நான் படித்து வேலை நிமித்தம் மதுரையை
விட்டு போனவுடன் இரண்டு தடவை மட்டும் பேசினேன். 1985 அக்டோபர் முதல் வாரம். ஶ்ரீதேவியில் ராஜரிஷி ஓடுகிறது. தியேட்டர் வாசலில் நண்பர்களோடு நின்று பேசும்போது வந்தார். ஒரு மணி நேரம் பல விஷயங்கள். அப்போது ஓடிக்கொண்டிருந்த முதல் மரியாதை பற்றி மிகவும் சிலாகித்தார். ராஜ ரிஷி வசூல் பற்றி பேச
பின் தீபாவளிக்கு படிக்காதவன் வருவது பற்றியெல்லாம் (நீங்க Khud dhar பார்த்திருக்கீங்களா?) பேசியது இன்றும் நினைவில். அடுத்து 1989 ஜீலை ஒரு கல்யாணத்தில் பார்த்து பேசினேன். ராஜாதி ராஜா வெற்றி பற்றி பேசியவர் அபூர்வ சகோதரர்கள் வெற்றி பற்றியும் சிலாகித்தார். எந்த நடிகரை பற்றியும் தவறாக
