விநாயகர் சதுர்த்தி வசூல் தகராறு – ரஜினி ரசிகர் குத்திக் கொலை

170

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பணம் வசூல் செய்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பார்த்தசாரதி (20). இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். நேற்று வினாயகர் சதுர்த்திகொண்டாடப்பட்ட நிலையில், பார்த்தசாரதி அவரின் நண்பர் தினேஷ்குமார்(22) உள்ளிட்ட சிலர் அந்த பகுதி மக்களிடையே பனம் வசூல் செய்து வினாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியுள்ளனர்.

அதன்பின் இரவு அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.அப்போது, வினாயகர் சிலை வாங்கியதில் தினேஷ்குமார் மோசடி செய்து விட்டதாக பார்த்தின் கூற, இது தினேஷுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின் நள்ளிரவு 1 மணிக்கு இது தொடர்பாக இருவருக்குடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் பார்த்தசாரதியின் கழுத்தில் குத்தினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுத்த கார்த்திகேயன் என்பவருக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது. இதனால், தினேஷ்குமர் தலைமறைவாகி விட்டார்.

அதன்பின் லால்குடி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

பாருங்க:  திருமணமாகி ஒரு வாரத்தில் பெண் கொலை - கள்ளக்காதல் காரணமா?