சமூக வலைதளங்களில் தன் பெயரில் போலி அறிக்கை- ரஜினி விளக்கம்

27

சமூக வலைதளங்களான பேஸ்புக், மற்றும் டுவிட்டரில் சில நாட்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் நாள் குறித்து அறிவித்தது போலவும், அவரது உடல்நிலை குறித்தும்  தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

இதை பார்த்த ரஜினிகாந்த் அப்படி தன் பெயரில் வரும் விசயங்கள் போலியானவை என விளக்கம் கொடுத்துள்ளார். அவரின் விளக்கம் வருமாறு

என் அறிக்கை போல சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை தீவிரமாக பரவி வருகிறது அது என் அறிக்கை அல்ல. இருப்பினும் எனக்கு மருத்துவர்கள் அளித்த தகவல்கள் உடல்நிலை குறித்து அளித்த தகவல்கள் அனைத்தும் உண்மை இது குறித்து என் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.

பாருங்க:  ரஜினிக்கு என் வாழ்த்துக்கள் - அமைச்சர் ஜெயக்குமார்