Connect with us

ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்குவது உறுதி

Entertainment

ரஜினியின் 169வது படத்தை நெல்சனே இயக்குவது உறுதி

இயக்குனர் நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் சரியாக போகவில்லை என்றே கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பீஸ்ட் பட கடும் நெகட்டிவ் விமர்சனங்களால் அதிர்ந்து போன ரஜினி, நெல்சனை அடுத்த படத்தில் பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல் எப்படி பரவியது என்றால், டுவிட்டரில் தான் இயக்கிய படங்களை குறிப்பிட்டு வைத்திருந்த நெல்சன், ரஜினி படத்தையும் அந்த லிஸ்டில் வைத்திருந்துள்ளார்.

பீஸ்ட் பட நெகட்டிவ் விமர்சனங்களால் தலைவர் 169 என்று தான் வைத்திருந்ததை நீக்கி விட்டாராம் இதனால் நெல்சன் ரஜினி படத்தை இயக்கவில்லை என்ற செய்திகள் பரவி விட்டன.

இந்த நிலையில் இன்று காலை நெல்சனை சந்தித்த ரஜினி அவருக்கு ஆறுதல் சொல்லி படம் நாமதான் பண்றோம் என சொல்லி இருக்கிறாராம்.

நெல்சனும் தலைவர் 169வது படம் செய்வதை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாருங்க:  நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top