வெள்ளை அறிக்கை எதுக்கு? பச்சை.. மஞ்சள்.. ஏன் வெள்ளரிக்காய் கூட தருவோம் – ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி

197

அதிமுக ஆட்சியில் பெற்றுள்ள முதலீடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்திற்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டுப்பயணமாக அமெரிக்கா, துபாய், லண்டன் போன்ற நாடுகளுக்கு சென்றார். அங்கிருந்து தொழில் முதலீட்டை அவர் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவே இந்த பயணம் என அரசு தரப்பில் விளக்கப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த ஸ்டாலின் ‘தமிழ்நாட்டில் ஏற்கனவே 220 நிறுவனங்கள் தொழில் தொடங்கிவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டமன்றத்திலேயே 2 முறை பேசியுள்ளேன். தற்போது அமெரிக்க சென்று அவர் ரூ.2780 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்றிருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அப்படி உண்மையிலேயே அதிமுக ஆட்சியின் போது பெற்ற முதலீடுகள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறோம்’ என பேசியிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ‘ முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை, பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் கூட தருவோம். தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது. ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத் தனமானது’ என அவர் பேட்டியளித்தார்.

பாருங்க:  தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?