cinema news
கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்த நடிகர்
தமிழில் சாமி, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லத்தனமானவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்தவர் ராஜேந்திர நாத். இவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர்.
தேமுதிக கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் முக்கூடலில் உள்ள முத்துமாலையம்மன் கோவிலில் கோவில் பெயரை பயன்படுத்தி பணமோசடி மற்றும் பஞ்சலோக சிலைகள் அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக முக்கூடலை சேர்ந்த ராஜா கிரிதரன் உள்ளிட்டவர்கள் இவருக்கு தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், முகநூலிலும் அவதூறு பரப்பி வருவதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.