சசிக்குமார் தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், எம்.ஜி.ஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து வருகிறார். பகைவனுக்கு அருள்வாய் படம் மட்டும் தற்போதுதான் பூஜை போடப்பட்டு நடந்து வருகிறது.
மற்ற படப்பிடிப்புகள் எல்லாம் கடந்த கொரோனாவிற்கு முன்பு பூஜை போடப்பட்ட திரைப்படங்களாகும் லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் இப்போதுதான் ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.
அந்த வகையில் சசிக்குமார் நடித்த ராஜவம்சம் படம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை கே.வி கதிர்வேலு என்பவர் இயக்கியுள்ளார்.