Latest News
ராஜஸ்தானில் ஓமைக்ரான் தொற்று
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கொரொனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முதலாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
4 மாநிலங்கள், அதன் தலைநகரங்களில் இதுவரை ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டனர்