தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியவன் ராஜராஜசோழன். இவருக்கு வருடம் தோறும் இவர் பிறந்த சதய நட்சத்திரத்தன்று சதய விழா எடுக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் திரளும்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி தஞ்சையில் நடைபெற இருக்கிறது இதையொட்டி எப்பொழுதும் வழக்கமாக நடைபெறும்
கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வீதியுலா எதுவும் இல்லாமல் வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் விழா ஒரு நாள் மட்டுமே இந்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி வரும் 26-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் நடைபெற உள்ளது.
காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை ஆகியவை தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்றால் வழக்கமாக நடைபெறும் விழாவில் பெரிதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.