ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியவன் மாமன்னன் ராஜராஜன் இவரது சமாதி தஞ்சை அருகே பூதலூரில் உள்ளது.இது பராமரிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை அருட்பணி அறக்கட்டளை செயலர் தியாகராஜன், உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்திருக்கிறார்.

தஞ்சை பூதலூரில் இவரது சமாதி பராமரிக்கப்படாதது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மும்பையில் மன்னர் சிவாஜியை மக்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பெருமை மிக்க மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை.

ராஜராஜசோழன் சமாதியை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.