குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானவர் கெளதமி. இவர் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வரப்பெற்றார். ஒரு காலத்தில் கமல்ஹாசனுடன் நட்பில் இருந்த கெளதமி தற்போது கமல் பக்கம் செல்வதில்லை.
இவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கெளதமியை ராஜபாளையம் தொகுதியில் நிற்க ஏற்பாடு நடந்து வருகிறது. பாஜக சார்பில் கெளதமிதான் வேட்பாளர் என இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
எனினும் கூட்டணி பேச்சு வார்த்தை முழுமையாக முடிவடையாத இந்த நேரத்தில் அவர்தான் வேட்பாளர் என பாஜகவினர் ராஜபாளையம் பகுதிகளில் பேசி வருகின்றனர்.
இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

