கடந்த ஒரு வருட திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ராஜகண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதியை சொல்லி திட்டியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சரின் இலாகாவான போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு வேறு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சரின் துறை நிர்வாக வசதிக்காகவே முதல்வர் ஸ்டாலின் மாற்றியமைத்தார். அமைச்சரின் புகார் இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.