cinema news
பெரும்படம் எடுத்த ராஜமவுலி இயக்கும் குறும்படம்
தெலுங்கில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் ராஜமவுலி. இவர் தற்போது பிரமாண்டமாக ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இவரின் பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிக பிரமாண்டமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை பிரமாண்டத்தில் தமிழ் இயக்குனர் ஷங்கரை மிஞ்சி படம் எடுத்து வரும் இவர் ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி முடிக்கும் முன் காவல்துறையின் சேவையை போற்றும் வகையில் சில நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம்.
இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் ஆந்திர மாநில காவல்துறை உயரதிகாரிகளை ராஜமவுலி இதற்காக சந்தித்து விட்டு வந்துள்ளார்.