Entertainment
ராஜா கைய வெச்சா படத்துக்கு 31 வயது
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ராஜா கைய வெச்சா என்ற பாடல் மிகவும் அந்த நேரங்களில் பிரபலமானது. உடனே அந்த நேரத்திலேயே அதே பெயரிலேயே எடுக்கப்பட்ட படம்தான் ராஜா கைய வெச்சா.
சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் மற்றொரு சிறப்பு பாடல்கள், உன் கணக்குத்தான், மழை வருது மழை வருது, மருதாணி அரைச்சேனே போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களானது.
பிரபு,ரேவதி, கெளதமி,சரத்குமார், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற மழை வருது மழை வருது குடை கொண்டு வா பாடல் காலம் கடந்தும் இன்றும் பேசப்படுகிறது.
இப்படத்தில் மிகச்சிறப்பான பாடல்களை கொடுத்தவர் யாரு வேற யாரு இளையராஜாதான் அவரை தவிர இப்படி பாடல்களை யாரால் கொடுத்து விட முடியும்.
இன்றோடு இப்படத்துக்கு 31 வயதாகிறது. இந்த படம் கடந்த 1990ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி வெளியானது.
