தண்டவாளத்தில் குடிபோதை ஆசாமி.. காப்பாற்றிய ரயில்வே ஊழியர் – திக் திக் வீடியோ

தண்டவாளத்தில் குடிபோதை ஆசாமி.. காப்பாற்றிய ரயில்வே ஊழியர் – திக் திக் வீடியோ

குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவரை ரயில்வே ஊழியர் தன் உயிரை பணயம் வைத்து காப்பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

மனிதர்களின் அஜாக்கிரதையால் ரயில் மோதி பல விபத்துகள் ஏற்படுகிறது. இதில்,அவ்வப்போது உயிர் பலிகளும் ஏற்படுகிறது. சில சமயங்களில் சிலர் அதிர்ஷ்டவசமாக தப்பி விடுவதும் உண்டு. அது போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஒருவர் சைக்கிளுடன் தண்டவாளத்தை கடக்க முயல்கிறார். எப்போது அவருக்கு பின்னால் ரயில் வந்து கொண்டிருந்தது. போதையில் அதை கவனிக்காத அவர் சைக்கிளை அங்கிருந்து தூக்கி விசிவிட்டு தண்டவாளத்திலேயே நின்றுவிட்டார். இதனை தூரத்திலிருந்து கண்ட ரயில்வே ஊழியர் ஒருவர் வேகமாக ஓடி வந்து அவரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாறினர்.

தன் உயிரை பணயம் வைத்து அந்த நபரை ரயில்வே ஊழியர் காப்பாற்றி சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ரயில்வே ஊழியரை நிஜ ஹீரோ என பாராட்டி வருகின்றன.