Connect with us

இந்த பொருட்களுக்காவது ஜி எஸ் டி வசூலிக்காதீங்க! ராகுல் காந்தி வேண்டுகோள்!

Corona (Covid-19)

இந்த பொருட்களுக்காவது ஜி எஸ் டி வசூலிக்காதீங்க! ராகுல் காந்தி வேண்டுகோள்!

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சானிட்டைசர் உள்ளிட்ட பொருட்களுக்காவது ஜி எஸ் டி வசூலிக்கக் கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் பொருட்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜி எஸ் டி வசூலிக்கக் கூடாது எனக் கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ‘இக்கட்டான சூழ்நிலையில், சானிட்டைசர்கள், சோப்பு, மாஸ்குகள் உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறு. கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து சாதனங்களுக்கும் ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .’ எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் ஜிஎஸ்டி இல்லா கொரோனா என்ற ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளார். கடந்த 17 ஆம் தேதி மத்திய அரசு சானிட்டைசர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி எஸ் டி பற்றி பட்டியல் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சானிட்டைசர்கள் மற்றும் சோப் ஆகியவற்றுக்கு 17 சதவீதம் ஜி எஸ் டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  விவேக் மறைவு விக்னேஷ் சிவன் உருக்கம்

More in Corona (Covid-19)

To Top