Published
10 months agoon
ஏ.ஆர் ரஹ்மான் ஆரம்ப காலத்தில் இசையமைத்த சில படங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு சரி அதன் பிறகு ஹிந்தி திரையுலகைத்தான் அதிகம் நம்பினார்.
கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழில் இருந்து பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்ட தமிழ் சினிமா பிரபலம் ஏ.ஆர் ரஹ்மான் தான். ஏ.ஆர் ரஹ்மான் ஹிந்தி பாடல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஹிந்தியை அரசு திணிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ்த்தாயை ஹிந்தி எதிர்ப்புக்கு எதிராக சித்தரிக்கிறேன் என கையில் ஒரு ழ என எழுதப்பட்ட ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு அவலட்சணமாக ஒரு படத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஏ.ஆர் ரஹ்மானை நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தனர்.இந்த சூழ்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஏ.ஆர் ரஹ்மான் ஹிந்தி பாடல்களை பாடினார். அப்போ பிழைப்புக்கு மட்டும் ஹிந்தி பாடல்களா என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.