உத்திரபிரதேசத்தில் இரண்டு நாட்களாக ஹாட் டாபிக் ஆக பற்றி எரியும் விசயமான ஹாத்ராஸ் என்ற இடத்தில் ஒரு பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டிருக்கும் விசயம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுலும் தன் தொண்டர்களோடு ஆறுதல் கூற சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு புறப்பட்டார்.
அவர் செல்வதற்கு முன்பே போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் நன்கு அவரை தடுத்து நிறுத்துவது தெரிகிறது. இருப்பினும் தடுப்பை மீறி செல்கிறேன் என அவராகவே கீழே விழுவது நன்கு தெரிகிறது. இது வீடியோ ஆதாரமாகவும் இருக்கும் நிலையில் பல திமுக, காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கைகள் ஆதரவாளர்கள் அவரை பிடித்து தள்ளி விட்டார்கள். அவரை போட்டு அடித்து விட்டார்கள் என கட்டுக்கதை பரப்பி மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்கிறது.
இது குறித்து சமூக வலைதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து அவர் சில வருடங்களுக்கு முன் சட்டை எல்லாம் கிழிந்து வந்த புகைப்படத்தை வைத்து சுந்தரபாண்டியன் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியான இந்த பக்கம் இவுக எப்படியோ அந்தப்பக்கம் அவுக என்ற வார்த்தையை வைத்து மீம்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.