Latest News
இன்று ராகு கேது பெயர்ச்சியாகிறது
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு நிகழ்வுதான் ராகு கேது பெயர்ச்சி இந்த ராகு கேது பெயர்ச்சி கடந்த 2020ம் ஆண்டு நடந்தது அதன் பின் தற்போதுதான் நடக்கிறது.
ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறது.
இன்று மாலை 3.30 மணியளவில் வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.
சாயா கிரகங்கள் எனப்படும் ராகு கேது ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சமாகும் .
ராகு கேது பெயர்ச்சியால் தனி மனித வாழ்க்கையில் மாற்றமும் உலகம் மற்றும் நமது நாடுகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ராகு கேது சம்பந்தமான திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம், திருப்பாம்புபுரம் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தை ஒட்டி உள்ள கோவில்களில் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
