Latest News
சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!
மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் விஜய்யின் பாடலை மிக அருமையாக பாடுவதாகக் கூறிய லாரன்ஸ் அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பு வாங்கித் தந்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் அதிக அளவில் உதவிகளை செய்யும் முன்னணி நடிகராக ராகவா லாரன்ஸ் இருந்து வருகிறார். இதுவரை 4 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகளை அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சார்பாக நடத்தப்படும் மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற சிறுவர்கள் ட்ரஸ்ட்டுக்கும் உதவிகள் வழங்கி வருகிறார்.
சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாகவும் எனவே அவருக்கு அனிருத் இசையில் பாட விஜய் வாய்ப்பு வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது இந்த கோரிக்கையை தற்போது விஜய் மற்றும் அனிருத் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து நேற்று இரவு விஜய்யிடம் ராகவா லாரன்ஸ் பேசிய போது ’அந்த சிறுவனை ஊரடங்கு முடிந்த உடன் அழைத்து வரும்படியும் அந்த சிறுவனுக்கு கண்டிப்பாக அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஏழை மாற்றுத்திறனாளி சிறுவனின் கனவு நனவாக போவதை அறிந்து நான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
