Corona (Covid-19)
அம்மா உணவகத்துக்கு 50 லட்சம் – வாரி வழங்கும் நடிகர்!
சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் உதவி வருகின்றனர். அதில் யாரும் எதிர்பாராத விதமாக எல்லோரையும் விட அதிகமாக சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்துள்ளார். இதனால் தமிழக மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது அவர் சென்னையில் இயங்கும் இரு அம்மா உணவகங்களுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கொரோனாவால் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகங்களே மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. தமிழகத்தின் சில இடங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றன. லாரன்ஸின் இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
