ராகவன் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா

கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மஞ்சப்பை. ராஜ்கிரண் , விமல், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் இப்படம் சிறப்பான வெற்றியையும் பெற்றது.

இந்த படத்துக்கு பிறகு 6 வருட காலமாக எந்த ஒரு படத்தையும் இப்பட இயக்குனர் ராகவன் உருவாக்கவில்லை. அடுத்த படக்கதைக்காக மிகுந்த கவனம் செலுத்தி உருவாக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய கதை ஒன்றை எழுதி அதில் கதாநாயகனாக நடிக்க பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் ராகவன்.

இப்படத்தில் நடிகர் சந்தானம் மகன் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இப்போது சந்தானம் மகன் நடிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

பிரபுதேவா தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் ராகவனின் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.