Tamil Flash News
ரஜினியைப் பாராட்டி கவிதை… அதில் சீமானுக்கு நன்றி ! ராகவா லாரன்ஸ் அதிரடி !
ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது குறித்து தனது முடிவை அறிவித்துள்ள வேளையில் அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசியது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. தனக்கு முதல்வர் பதவி மேல் ஆசை இல்லை என்றும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ரஜினியின் இந்த முடிவு பற்றி சீமான் மற்றும் பாரதிராஜா ஆகியோர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதைப்போல ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ரஜினியைப் புகழ்ந்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது கவிதை :-
சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
“கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது”
என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது! இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களின் எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!